NFTECHQ

Friday 26 January 2018

உயர்வு தந்த தளர்வு
பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு, ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து போக்குவரத்து அதிகாரி கள் கூறும்போது, “கட்டண உயர்வுக்கு முன்பு அரசு போக்குவரத்து கழகங்களில் தினமும் சராசரியாக 2 கோடியே 10 லட்சம் பேர் பயணம் செய்தனர். வசூல் தொகையும் ரூ.21 கோடி வரை கிடைத்தது. கட்டண உயர்வுக்கு பிறகு சுமார் ரூ.35 கோடி முதல் ரூ.38 கோடி வரையில் வசூலாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தினசரி வசூல் ரூ.28 கோடியாக மட்டுமே உயர்ந்துள்ளது. பயணிகளின் மொத்த எண்ணிக்கையும் ஒரு கோடியே 85 லட்சமாக குறைந்து விட்டது. சுமார் 25 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணம் செய்வது குறைந்துள்ளது. இவர்கள் ரயில், தனியார், ஆம்னி பஸ் பயணத்துக்கு மாறியிருக்கலாம்’’ என்றனர்.
மேலும் சில அதிகாரிகள் கூறும்போது, “பஸ் கட்டணம் உயரும்போதெல்லாம், பயணி கள் எண்ணிக்கை கணிசமாக குறைவது வாடிக்கையான ஒன்றுதான். அதிக கட்டணம் உயர்வு, சீசன் இல்லாதது உள்ளிட்டவை இதற்கு காரணமாகும். இது நிரந்தரமானதல்ல. அதேநேரத்தில் அரசு போக்குவரத்து கழகங்களை உடனடியாக சீரமைத்து, தரமான சேவையை வழங்காவிட்டால் வருவாய் இழப்பு என்பது நிரந்தரமாகிவிடும்’’ என்றனர்.
தனியார் பஸ்கள்

இதுதொடர்பாக ஏஐடியுசி பொதுச்செயலாளர் ஜெ.லட்சுமணன் கூறும்போது, ‘‘ஒரே நேரத்தில் அதிகளவில் கட்டணம் உயர்த்தப்பட்டதால், குறிப்பிட்ட சதவீத மக்கள் ரயில், தனியார் பஸ் மற்றும் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்த தொடங்கி விட்டனர். சென்னையை காட்டிலும், தமிழகம் முழுவதும் இயக்கப்படும் 5 ஆயிரம் தனியார் நகரப் பஸ்களில் அரசு பஸ்களை விட குறைவாகவே கட்டணம் வசூலிப்பதால், அதிகளவிலான மக்கள் அதில் பயணம் செய்கின்றனர். எனவே, மக்களிடம் அரசு போக்குவரத்து கழகங்கள் நம்பக தன்மையை ஏற்படுத்த உடனடி யாக புதிய பஸ்களை வாங்கி, சிறப்பான சேவையை அளிக்க வேண்டும்’’ என்றார்.
நன்றி இந்து தமிழ்

No comments:

Post a Comment