NFTECHQ

Wednesday 28 February 2018



வாழிய பல்லாண்டு
இன்று (28.02.2018) பணி ஓய்வு பெறும்

திரு A.தங்கவேல் JTO
தோழர் P.நல்லசாமி TT
தோழர் P.குணசேகரன் TT
தோழர் K.கழுகாசலம் ATT

ஆகியோர் நலமுடனும் மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Tuesday 27 February 2018


இப்படியும் ஒரு இளைஞன்
ஆர்டிஐ ஆர்வலர் கிருஷ்ணா முராரி யாதவ்  
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் வேலையை உதறிவிட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி, கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு இளைஞர் ஒருவர் சேவை செய்து வருகிறார்.

உத்தரப்பிரேதசம் கான்பூரைச் சேர்ந்த கிருஷ்ணா முராரி யாதவ்(வயது29) என்கிற இளைஞர்தான் இந்த சேவையைச் செய்து வருகிறார்.

 தனக்கு சொந்தமாக அலுவலகம்கூட வைத்துக் கொள்ளாமல், ஒரு தேநீர் கடையில் அலுவலகத்தை நடத்தி மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவருகிறார். இப்பகுதி மக்கள் இவரை கே.எம்.பாய் என்று உரிமையுடன் அழைக்கிறார்கள்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் இருந்த கே.எம்.யாதவுக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வலிமையும், கூர்மையும் தெரியத் தொடங்கியது. இதனால், தான்பார்த்த வேலையை உதறி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண புறப்பட்டுவிட்டார்.
இந்த சேவைக்காக, பொம்மிதளா கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை சார்பில் ஸ்பூர்த்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை கே.எம்.யாதவ் பெற்று உள்ளார்.

இது குறித்து கே.எம்.யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:
"இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சமையல் சிலிண்டர் இணைப்பு கொடுக்கும் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் பிரிவில் பணியில் இருந்தேன். அப்போது, ஏராளமான மக்கள் தங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது ஏன் என நாள்தோறும் கேட்டு வருவது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
ஒருநாள், பொது தகவல் அதிகாரிக்கு ஒரு மனு அனுப்பினேன். அதில், எத்தனை பேரின் சமையல் கேஸ் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது, ஏற்கப்பட்டுள்ளது என்று கேட்டேன். ஆனால் எனக்கு பதில் இல்லை. அதன்பின் 2-வது முறையாக மேல்முறையீடு செய்ததில், பொது மேலாளர் எனக்கு பதில் அளித்தார்.
அவர் என்னை தொலைபேசி மூலம் அழைத்து, ஒப்பந்ததாரரை போய் சந்தித்து கேளுங்கள் எனக் கூறி, விண்ணப்பங்கள் அனைத்தையும் ஏற்கச் சொல்லுங்கள் என்று தெரிவித்தார். இதுதான் எனக்கு கிடைத்த முதல் வெற்றி.
அதன்பின் கடந்த 2013ம் ஆண்டு வேலையை உதறி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இயக்கமாக நடத்த தொடங்கினேன். ஒவ்வொரு கிராமமாகச் சென்று மக்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கூறுகள், பயன்கள், விவரங்களை ஒரு துண்டுபிரசுரங்களாக அச்சடித்து விநியோகம் செய்தேன்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்கூட, 95 சதவீத மக்களுக்கு ஆர்டிஐ குறித்து ஏதும் தெரியவில்லை. அதிலும் பெண்களுக்கு அது குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லை என்பது கிராமங்களில் நான் பயணம் மேற்கொண்டபோது தெரிய வந்தது.
இதையடுத்து, மக்கள் என்னை சந்திப்பதற்காக கான்பூரில் உள்ள ஒரு தேநீர் கடையைத் தேர்வு செய்து அங்கு சந்தித்து வந்தேன். இதனால், அந்த தேநீர் கடையின் 70 வயது முதலாளி ரமேஷ் சந்திர குப்தாவும் எனக்கு சிறந்த நண்பராகிவிட்டார்.
இதனால், காலப்போக்கில் அந்த தேநீர்கடைக்கும், ஆர்டிஐ டீக்கடை என்று பெயர் மாறும் அளவுக்கு மக்கள் வரத்தொடங்கிவிட்டனர்.
இந்த தேநீர் கடையை எனது அலுவலகமாக மாற்றினேன். மக்களிடம் இருந்து நூற்றுக்கணக்கில் புகார் மனுக்களைப் பெற்று, ஆர்டிஐ மூலம் தகவல்களை பெற்றுத் தந்தேன். ரேஷன் கடை, சமையஸ் கேஸ் இணைப்பு, நிலப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு ஆர்டிஐ மூலம் தகவல் பெற்று உதவினேன்.
நான் பெரிய மனிதர் அல்ல. மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எப்படி தீர்வு கான்பது என்பதை சரியாகச் செய்யும் எளிமையான மனிதன் நான்.
எனக்கு நண்பர்களைத் தவிர வேறுசொத்துக்கள் ஏதும் இல்லை. ஆர்டிஐ சட்டத்தில் பிரிவு 6(1)ன் கீழ் எந்த இந்திய குடிமகனும் மனுத்தாக்கல் செய்து தங்களுக்கு வேண்டிய தகவல்களை, அரசு அலுவலகத்தில் இருந்து பெறலாம்"
இவ்வாறு யாதவ் தெரிவித்தார்.

யாதவ் குறித்து இதுவரை உள்ளூர் செய்தித்தாள்களிலும் கட்டுரைகள் ஏராளமாக வந்துஇருக்கிறது, . பிபிசி இந்தி சேனலும் நேர்காணல் நடத்தி ஒளிபரப்பி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


அகில இந்திய மாநாடு
சிறப்பு சிறுவிடுப்பு

மார்ச் 14,15,16 தேதிகளில் அமிர்தசரசில் நடைபெறவுள்ள நமது அகில இந்திய மாநாட்டிற்கு சிறப்பு சிறுவிடுப்பு
பெறுவதற்கான உத்தரவை BSNL நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Sunday 25 February 2018


ஒப்பில்லா சிறப்புடன்
ஓய்வூதியர் சங்க பொதுக்குழு

24.02.2018 அன்று ஈரோடு பெரியார் மன்றத்தில் ஈரோடு மாவட்ட மத்திய அரசு ஓய்வூதியர் நலச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் தலைவர் அருமைத்தோழர்  D.மாணிக்கம் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. செயல்பாடுகள் மற்றும் பிரச்னைகள் தீர்வு குறித்து பொதுச் செயலர் தோழர் S.ராஜசேகரன் விளக்கமாக எடுத்துரைத்தனர். நிதிநிலை குறித்து பொருளர் தோழர் C. ராமசாமி எடுத்துரைத்தார்.

"ஓய்வூதியர் வழிகாட்டி" என்னும் அற்புதமான பயன்மிகு தகவல்களுடன் கூடிய ஒரு நூல் வெளியிடப்பட்டது. அந்த நூலை 20  ரூபாய்க்குக் கொடுத்தது சேவைச் சிந்தனையின் எடுத்துக்காட்டு.
இந்த நூல் குறித்த அறினமுக உரையை  தோழர் மாலி எடுத்துரைத்தார். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் அமைப்பின் செயலர் தோழர் சின்னசாமி நூலை வெளியிட   மூத்த தோழர் மு.வரதராஜன் பெற்றுக் கொண்டார்.

80வயதுக்கும் மேற்பட்டவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

தோழர்கள் ஜெகதீசன், ராஜமாணிக்கம், செல்கவராஜன் ஆகியோர் உரையாற்றினர்.
தோழர் சண்முகம்  நன்றி கூறினார்.

750 உறுப்பினர்களில் சுமார் 400 தோழர் தோழியர்கள் பங்கேற்றனர்.

சிறப்பான செயல்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக்த் திகழும் இந்த அமைப்பு மேலும் வளரவும் செயல் சிறக்கவும் வாழ்த்துகிறோம்.

Saturday 24 February 2018


அமைச்சருடன்
சந்திப்பு -24.02.2018

BSNL நிறுவனத்தின் தொழிற்சங்க தலைவர்கள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சரை இன்று சந்தித்தனர்.

BSNL ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய மாற்றம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக அமைச்சர் கூறினார்.


DOT செயலர் DPE- அணுகி கொடுக்கும் திறன் (affordability) என்ற நிபந்தனையில் இருந்து BSNLக்கு விலக்கு பெறவேண்டும் என்றும், அதன் பின் தான் அதற்கான மத்திய அமைசச்சரவையின் ஒப்புதலை பெற அனைத்து முயற்சிகளையும் செய்வதாகவும் உறுதியளித்தார்.


அதிகாரிகள் அல்லாத ஊழியர்களின் ஊதிய மாற்றக்குழுவை DPE வழிகாட்டல்படி BSNL உடனடியாக அமைக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.


பென்ஷன் பங்களிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு உள்ளது போலவே (கடசியாக பெறும் அடிப்படை ஊதியத்தில்) BSNL ஊழியர்களுக்கும் பென்ஷன் பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும் அதற்காக தான் அனைத்து நடவடிக்கையும் எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

ஓய்வூதியர்களின் ஓய்வூதிய மாற்றம் : DOT செயலரிடம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு  அமைச்சர் கூறினார்.


டவர் கார்ப்பரேஷன் : தனியார் மயமாக்கவோ, பங்கு விற்பனைக்கோ அரசு முயற்சிக்காது எனறு அமைச்சர் கூறினார்.

BSNLல் பனிபுரிவோரின் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58 ஆகக் குறைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.
தனிடவர்கம்பெனி குறித்து விவாதம் நடைபெற்றது. ஆனால் அமைச்சர் இது குறித்து  சாதகமான கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

ஒற்றுமை காத்து
ஓரணியில் நின்று
இமைசோரா விழிப்புடன் செயலாற்றி

சாதனை படைப்போம்


Friday 23 February 2018


அமைச்சருடன் சந்திப்பு
BSNL அனைத்து தொழிற்சங்க  அமைப்புகளின் தலைவர்கள்
தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் திரு மனோஜ்சின்ஹா அவர்களுடன் பிரச்னைகள்  குறித்து 24.02.2018 பகல் 12 மணியளவில் விவாதிக்கவுள்ளனர்.


திரும்பப் பெறப்பட்டது
21.02.2018 அன்று BSNL ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்னையில் DOT தான் கொடுத்த கடிதத்தை திரும்பப் பெறுவதாக BSNL தலைமை அதிகாரிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

ஆண்டுப்  பேரவை

ஓய்வூதியர் சங்கத்தின் ஆண்டுப் பேரவை 24.02.2018 அன்று காலை 10 மணிக்கு நடைபறும்

DOT கடிதம்
BSNL  ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய மாற்றம் குறித்து DOT   21.02.2018 அன்று BSNL தலைமை அதிகாரிக்கு  ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தின் நகலை BSNL அனைத்து சங்கங்களின்  பொதுச் செயலாளர்களுக்கும் BSNL நிர்வாகம் அனுப்பியுள்ளது.

அதன் விவரங்க்கள்

மூன்றாவது ஊதிய மாற்றம்

BSNL கடந்த சில ஆண்டுகளாக நட்டத்தில் இயங்கி வருகிறது.
2013-14 ல் ரூ 7124 கோடி
2014-15ல் ரூ 8843 கோடி
2015-16 ல் ரூ 4169 கோடி
2016-17ல் ரூ 4793 கோடி
ஆகஸ்ட் 2017ல் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கான ஊதிய மாற்றம் குறித்து மத்திய அரசு ஆகஸ்ட் 2017ல் உத்தரவு வெளியிட்டுள்ளது. நட்டத்தில் இயங்கும் பொத்துதுறை நிறுவனங்களுக்கு ஊதிய உயர்வுடன் (FITMENT) கூடிய ஊதிய மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதி BSNL நிறுவனத்துக்கும் பொருந்தும்.

ஓய்வூதிய மாற்றம்

BSNL நிறுவனத்தில் இணைந்தவர்கள் ஓய்வூதிய விதி 37Aன் கீழ் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். 2007ல் பணியில் உள்ள ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம்   அமலான போது ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதிய மாற்றம் அமல்படுத்தப்பட்டது. அதைப்போலவே மூன்றாவது ஊதிய மாற்றம் அமலாகும்போது ஓய்வூதிய மாற்றமும் அமலாகும்.

தனி டவர் நிறுவனம்

தனி டவர் நிறுவனம் அமைப்பது குறித்த முடிவை மத்திய அரசு செப்டம்பர் 2017ல் எடுத்தது. இந்த நிறுவனம் BSNL நிறுவனத்துக்கே முழுமையும் சொந்தமான நிறுவனமாக இருக்கும். 04.01.2018ல் BSNL டவர் கம்பெனி துவங்கி செயல்படத் துவங்கி விட்டது


பனி ஓய்வு வயதுக் குறைப்பு மற்றும் விருப்ப ஓய்வுத் திட்டம்

ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58 ஆகக் குறைப்பது, விருப்ப ஓய்வுத் திட்டம் போண் றவை BSNLல் இல்லை.


டெல்லியில் பேரணி
இன்று (23.02.2018) டெல்லியில் தொலைத்தொடர்புத்துறையின் அலுவலகமான சஞ்சார் பவன் நோக்கி பேரனியும் முற்றுகைப் போராட்டமும் நடைபெறுகிறது.

Tuesday 20 February 2018

ஊதிய மாற்றம்
பிரதமர் அலுவலக விளக்கம்
BSNL ஊழியர்களுக்கு  ஊதிய மாற்றம் வழங்குவது சம்பந்தமாக
22/12/2017
அன்று நமது NFTE சங்கம்  பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தது.
DPE இலாக்காவிடமிருந்து நமது பொதுச்செயலருக்கு
அதற்கான பதில் 31/01/2018 அன்று அனுப்பப்பட்டுள்ளது.
பொதுத்துறை ஊழியர்களுக்கான
8
வது ஊதிய மாற்றம் சம்பந்தமாக
24/11/2017
அன்று DPE தனது
வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளதென்றும்
அதில் குறிப்பிடப்பட்டுள்ள  வழிகாட்டுதல்களில்
விலக்குப்பெறவேண்டுமெனில்
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வேண்டுமெனவும்.
அதற்காக DOT அணுக வேண்டுமெனவும்
நமது பொதுச்செயலருக்கு கடிதம் அறிவுறுத்தியுள்ளது.

DOTஐச் சந்தித்து அதன் மூலம்  ஊதிய மாற்றம் அளிப்பதற்கு
BSNL
க்கு நட்டத்திலிருந்து விலக்கு  என்னும் பரிந்துரை பெறப்பட்டு
மத்திய அமைச்சரவையின்  ஒப்புதல் பெறப்பட்ட பின்பே
நமது ஊதிய மாற்றம் என்பது  நடைமுறைக்கு வரும்.

Saturday 17 February 2018

அஞ்சலி

தோழர் K. ராமலிங்கம் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் அறிவிக்கிறோம்.

NFPTE பேரியக்கதில் ஈரோடு தொலைபேசிக் கோட்டத்தின் E3 சங்கத்தின்  மாவட்டச் செயலராகப் பணியாற்றியவர் தோழர் ராமலிங்கம்.
NFTE பேரியக்கத்தின் ஈரோடு மாவட்டச் சங்கத்தின் மாவட்ட உதவிச் செயலாராகப் பணியாற்றிய தோழர்.
ஈரோடு மாவட்டச் சங்கத்தின் இணையதளத்தைத் துவக்கி சில ஆண்டு காலம் பராமரித்த தோழர்.
கணிணியில் ஆழ்ந்த அறிவாற்றல் பெற்ற தோழர்.
பணிநிறைவு பெற்று இரு ஆண்டுகளே ஆன நிலையில்
ஒரு விபத்தின் விளைவாக அவர் காலமானார் என்பது ஆழ்ந்த வருத்தமளிக்கிறது.

அவரது மறைவுக்கு மாவட்டச் சங்க்கம் சார்பாக அஞ்சலியையும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த் இரங்க்கலையும் காணிக்கையாக்குகிறோம்.
நாடாளுமன்றத்தில்
டவர் கம்பெனி
நாடாளுமன்றத்தில் தனி டவர் கம்பெனி
அமைப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு  அமைச்சர் அளித்த பதில்

BSNL நிறுவனத்தில் தற்போது 66847 மொபைல் டவர்கள் உள்ளன. இவற்றில் 61124 டவர்கள் BSNL நிறுவனத்தின் சொந்த நிதி ஆதாரம் மூலம் நிறுவப்பட்டவை. 5723 டவர்கள் USO ந்தி உதவியுடன் நிறுவப்பட்டவை. இந்த டவர்களை ஒரு தனி கம்பெனி மூலம் பராமரிக்க  அரசு முடிவு செய்துள்ளது.  இந்த் கம்பெனி BSNL நிறுவனத்துக்கே முழுமையாக சொந்தமானதாக இருக்கும்.  அந்த டவர் கம்பெனி இரண்டு ஆண்டுகளில் நிதிநிலையைவளமாக்கி, நிலைத்த தன்மையை  மேம்படுத்தும். பிற்கு மற்றொரு நிறுவனதைப் பங்குதாரராக  இணைது

செயல்படும்.

Thursday 15 February 2018


11,000 கோடி ரூபாய் மோசடி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11,000 கோடி ரூபாய் அளவிற்கு மோசடியாக பணபரிமாற்றம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மோசடிகள் நடந்ததது சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து 280 கோடி ரூபாயை ஏமாற்றியதாக வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், வங்கியின் ஓய்வு பெற்ற துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் கரத் ஆகியோர் மீதும் மோசடி புகார் உள்ள
நாடாளுமன்றத்தில் டவர் கம்பெனி
நாடாளுமன்றத்தில் தனி டவர் கம்பெனி
அமைப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு  அமைச்சர் அளித்த பதில்

BSNL நிறுவனத்தில் தற்போது 66847 மொபைல் டவர்கள் உள்ளன. இவற்றில் 61124 டவர்கள் BSNL நிறுவனத்தின் சொந்த நிதி ஆதாரம் மூலம் நிறுவப்பட்டவை. 5723 டவர்கள் USO ந்தி உதவியுடன் நிறுவப்பட்டவை. இந்த டவர்களை ஒரு தனி கம்பெனி மூலம் பராமரிக்க  அரசு முடிவு செய்துள்ளது.  இந்த் கம்பெனி BSNL நிறுவனத்துக்கே முழுமையாக சொந்தமானதாக இருக்கும்.  அந்த டவர் கம்பெனி இரண்டு ஆண்டுகளில் நிதிநிலையைவளமாக்கி, நிலைத்த தன்மையை  மேம்படுத்தும். பிற்கு மற்றொரு நிறுவனதைப் பங்குதாரராக  இணைது

செயல்படும்.

Wednesday 14 February 2018

வாராக் கடன் தள்ளுபடி
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடந்த நிதி ஆண்டில் ரூ.20 ஆயிரத்து 339 கோடிக்கு வாராக் கடனை தள்ளுபடி செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
அரசு துறை வங்கிகள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினைகளில் வாராக் கடன் முக்கியமானதாகும். ஏறக்குறைய ரூ.9 லட்சம் கோடி வாராக் கடனால் வங்கிகள் சிக்கித் தவிக்கின்றன. இதில் இருந்து மீட்பதற்காக சமீபத்தில் அரசு ரூ.2.11 லட்சம் கோடி முதலீட்டு நிதி வழங்கப்படும் என அறிவித்தது.

இந்நிலையில், வாராக் கடன் தள்ளுபடி ஒவ்வொரு ஆண்டும் அரசு வங்கிகள் சார்பில் அதிகரித்து வருவது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

இதில் நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ கடந்த 2016-17 ஆம் நிதி ஆண்டில் ரூ.20 ஆயிரத்து 339 கோடி வாராக் கடனை தள்ளுபடி செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த நிதி ஆண்டில் ரூ.81 ஆயிரத்து 683 கோடி வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சம் எஸ்பிஐ வங்கியின் தள்ளுபடியாகும்.
கடந்த 2012-13 ஆம் ஆண்டில் அரசு வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக் கடன் தள்ளுபடி என்பது, ரூ.27ஆயிரத்து 231 கோடியாக மட்டுமே இருந்தது. இது கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துவிட்டது என அரசின் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-14 ஆம் ஆண்டில் ரூ.34,409 கோடி, 2014-15 ஆம் ஆண்டில் ரூ.49,018 கோடி, 2015-16 ஆம் ஆண்டில் 57,585 கோடி, 2016-17 ஆம் ஆண்டில் ரூ.81,683 கோடி ஆக உயர்ந்துள்ளது.

எஸ்பிஐ வங்கி தவிர்த்து, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.9,205 கோடியும், பேங்க் ஆப் இந்தியா வங்கி ரூ.7,346 கோடியும், கனரா வங்கி ரூ.5,545 கோடியும், பேங்க் ஆப் பரோடா ரூ.4,348 கோடி கடனை கடந்த 2016-17 ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்துள்ளன.
நடப்பு நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் அரசு வங்கிகளின் வாராக் கடன் தள்ளுபடி என்பது ரூ.53 ஆயிரத்து 625 கோடியாகும்.


Saturday 10 February 2018

அநீதி
2017 ஆம் ஆண்டுக்கான "சஞ்சார் சேவா  பதக்" விருது பெற்றவர்கள் பட்டியலை BSNL நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
BSNL நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையில் பணியாற்றுவோர் டெலிகாம் டெக்னிசியன் கேடரில் உள்ளவர்கள். அதிகமான உடல் உழைப்பு தருபவர்களும் அவர்களே.
ஆனால் அந்த கேடர் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது வருந்தத்தக்கது மட்டுமல்ல. கண்டிக்கத்தக்கது.
பல்வேறு சிரமங்களுக்கிடையிலும் பல்வேறு பணிகளைச் சிறப்பாக ஆற்றிடும் டெலிகாம் டெக்னிசியன் தோழர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களைத் தவிர்ப்பது என்பது தவறானது.

இனியாவது இந்தத் தவறைத் திருத்திக் கொள்ள நிர்வாகம் முன்வரவேண்டும்.

Friday 9 February 2018

எண்ணிக்கை
31.03.2017 அன்று BSNLலில்
பணிபுரியும் ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகளின்  விவரம்
ஊழியர்கள் - 151094
அதிகாரிகள் - 45354

மொத்தம்- 196448

Thursday 8 February 2018

வதந்திகளை நம்பாதீர்

Beware of Rumour Mongers ?

Due to the three days historic strike in September 2000 by NFTE and FNTO government pension was safeguarded for all those DOT employees who got permanent absorption in to BSNL with effect from 01-01-2000. As per the strike agreement CCS pension rules, 1972 was amended and a sub rule 37 A was inserted exclusively for DOT employees absorbed in to BSNL. Accordingly for the last seventeen years till now our employees / executives after retirement are getting the government pension from Consolidated Fund of Government of India with out any hitch . Even the wrong order issued in 2006 by DOT limiting its commitment to pension expenditure of our employees/ executives was recently rectified. 
In this situation few people are wantonly spreading wild rumours that the retirement age in BSNL is going to be reduced from 60 to 58 years. Opposition to this proposal by AUA leaders has of course given some credibility to this wrong and motivated rumours . Hence this clarification. As our government pension is linked firmly with CCS( Pension) Rules , 1972 unless the age of retirement for entire Central Government employees is modified or reduced none can reduce it only for BSNL employees/ executives selectively . This simple fact was forgotten by All and unnecessarily credence has been given to wild rumours. Let us firmly assure the employees in BSNL that NFTE will not allow any dilution of our achievements in Winning the government pension for us which is the Eighth wonder of the world for which we had to thank Comrade O.P. Gupta throughout our life.


நன்றி:தோழர் மதிவாணன்  

Wednesday 7 February 2018

அமைச்சர் இல்லை ஆறாம் தேதி.
ஆகவே பேச்சுவார்த்தை இல்லை.
அமைச்சருக்கு நேரம் கிடைக்கும்போது

பேச்சுவார்த்தை நடைபெறும்.

Monday 5 February 2018

அமைச்சருடன் பேச்சுவார்த்தை
30.01.2018 முதல் 5 நாட்கள் நடைபெற்ற சத்தியாகிரகம்,
மற்றும் தொடரும் விதிப்படி வேலை இயக்கம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. 06.02.2018 அன்று மாலை 5 மணிக்கு தொலைத்தொடர்புத்துறை அமைச்சர்  திரு மனோஜ்சிஹா BSNL தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த்வுள்ளார்.

நியாயம் கிடைக்கும் என நம்புவோம்.
PLI குழுக்கூட்டம்

PLI குறித்து நிர்வாகமும் அங்கீகரிக்கப்பட்ட  ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்கும் கூட்டம் 15.02.2018 மாலை 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு??!!
நாம் அறிந்த வரை, இதுவரை போராட்ட காலத்தில் கிளைமாநாடுகள், மவட்டமாநாடுகள், மாநில மாநாடுகள், அகில இந்திய மாநாடு என எதையும், எந்த சங்கமும் நடத்தியதில்லை.

ஆனால் முதன்மைச் சங்கம் கேரளாவில் மாநில மாநாட்டை சத்தியாகிரக போராட்ட காலமான 01.02.2018 முதல் 03.02.2018 வரை நடத்தியுள்ளது. 

Saturday 3 February 2018

மனிதவள மேம்பாட்டு இயக்குனர் அளித்த உறுதிமொழி


BSNL நிறுவனத்தின் மனிதவள இயக்குனர்  (DIRECTOR SR) தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் மற்றும் செயலாளரைச் சந்திக்கவும் பிரஸ்னைகள் குறித்து விவாதிக்கவும்  ஆவன செய்வதாக தொழிற்சங்கத் தலைவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
சத்தியாகிரகம் நிறைவு
30.01.2018 அன்று துவங்கிய சத்தியாகிரக இயக்கம் 03.02.2018 அன்று நிறைவுற்றது.

காலவரையற்ற விதிப்படி வேலை தொடர்கிறது.
அண்ணா தந்த பாடம்
பிப்ரவரி 3
அண்ணா நினைவு தினம்.

அரசியல் களத்தில் யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, பரமவைரியான ராஜாஜியையும் இணைத்து ஒரு வலுபவான கூட்டணியை அமைத்து 1967ல் காங்க்கிரஸைஆட்சியிலிருந்து அகற்றினார்.
இன்றைய சூழலில் 2019ல் நாட்டை யார் ஆளக்கூடாது  என்ற உறுதியுடன் அணிசேர்க்கை அமைவது அவசியம்.


இதுவே அண்ணா கற்றுத்தந்த பாடம்.
சத்தியாக்கிரகம்

காந்திஜி அறிமுகப்படுத்தியப் போராட்ட வடிவங்கள் ஒத்துழையாமை,செய் அல்லது செத்துமடி,வரிகொடா இயக்கம்,உண்ணாவிரதம்,சத்தியாக்கிரகம் என்பன.

முன்னவை மூன்றும் அரசியல் தளத்தில் இருந்து எழந்தவை.பின்னவை இரண்டும் ஆன்மீகத் தளத்தில்
இருந்து முன் வைக்கப்பட்டவை.
அரசியல் வடிவங்கள் காந்திஜிக்கு முன்பும்,கட்டப்பொம்மன் உட்படகுறுநில மன்னர்கள் முயற்சித்தவை.

லெனின் கூட ருஷ்யாவின் அந்நியப் படையெடுப்பு நடந்த போழ்து தன்தேசத்து மன்னன் ஜாருக்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று றைகூவல் விடுத்தார்.அது புரட்சிக்கு வழி கோலியது.

உண்ணாவிரதம்,சத்தியாக்கிரக- வடிவங்கள் காந்திஜி மீது உலகப் பார்வையை ஈர்த்தவை.காந்திஜி ஒரு தூய இந்துவின் வாழ் நெறிகளை ஓம்பினார்.பிற மதத்தினர் மீது காழ்ப்பு இன்றி அக்கறைச் செலுத்தினார்.

தூய இந்துவின் கடமை பிறரை நேசிப்பது என்பதே இந்து தத்துவமும் அதன் தரும்மும் போதிப்பவை.எல்லா மத தத்துவங்களின் சேர்கூடு அது.

பாரதிய ஜனதாக் கட்சி தனது வசிய சக்தியால், தான் ஒவ்வாமைக் கொண்டிருந்த தேசத் தலைவர்களைக் கூட, தன்னுக்குள் காந்தப் புலனாய் இழுத்துக் கொள்ளும் தகிடு தத்தங்களைச் செய்கிறது.

காந்திஜி,அம்பேத்கர்,பகத்சிங்,வாஞ்சி எனப் பலரைச் சுடலாம்.

இந்திய இடதுசாரிகள் தங்கள் சொந்தக் குழந்தைகளை ஆராதிக்க வல்லவர்கள்.அடுத்த வீட்டுக் குழந்தை அழகாய் இருந்தாலும் தூக்கிக் கொஞ்ச தயங்குபவர்கள்.இது பலவீனம் தான்.

இடதுசாரி தொழிற்சங்கங்கள் காந்திஜியின் உண்ணாவிரதத்தை சுவீகரித்துக் கொண்டது ஒரு நல்ல விஷயம்.
சத்தியாக்கிரகம் என்பது ஒரு உயர்ந்த ஆழ்நிலைத் தியானம்.இதன் மெய்யைப் புரிந்து கொள்வது கடினம்.குண்டலினி யோகப் பயிற்சியைப் போன்றது.சகிப்புத் தன்மையின் உச்சம் அது.இயேசுவின் மறு கண்ணத்தைக் காட்டு என்பதானது.பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை உலுக்கிப் போட்டது இது.

தொழிற்சங்கங்கள் எந்த அர்த்தத்தில் இந்த வடிவத்தைக் கையாள்வது?எதையாவது புதுசா செய்யனும் என்று மூளை உபத்திரவத்தால் முயல்பவர்கள் காந்திஜி ஆக முடியுமா? தொழிற்சங்கங்கள் தங்கள் பகுதி கோரிக்கைகளை வலியுறுத்தும் போது இவ்வடிவம் சாத்தியப்படுமா? தேசத்தின் இறையாண்மையைக் காத்திட காந்திஜி முன் வைத்த இந்த வடிவம்' வன்கொடுமைகளைத் தாங்கிக் கொள்.உயிரேப் போனாலும் திருப்பித் தாக்காதே.கழிவிரக்கம் மூலம் தேச மக்களைக் கிளர்ந்தெழச் செய்' என்பதை வலியுறுத்தியது.
பரசுராமரின் தூக்கம் கலையக்கூடாது என்பதற்காக கர்ணன் விஷவண்டுவின் குடைச்சலைத் தாங்கிக் கொண்டது போல.
நாம் எந்த வலியைச் சகித்துக் கொண்டோம்?

நன்றி தோழர் ஜெயராமன், சம்மேளனச் செயலர்