NFTECHQ

Friday 23 February 2018


DOT கடிதம்
BSNL  ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய மாற்றம் குறித்து DOT   21.02.2018 அன்று BSNL தலைமை அதிகாரிக்கு  ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தின் நகலை BSNL அனைத்து சங்கங்களின்  பொதுச் செயலாளர்களுக்கும் BSNL நிர்வாகம் அனுப்பியுள்ளது.

அதன் விவரங்க்கள்

மூன்றாவது ஊதிய மாற்றம்

BSNL கடந்த சில ஆண்டுகளாக நட்டத்தில் இயங்கி வருகிறது.
2013-14 ல் ரூ 7124 கோடி
2014-15ல் ரூ 8843 கோடி
2015-16 ல் ரூ 4169 கோடி
2016-17ல் ரூ 4793 கோடி
ஆகஸ்ட் 2017ல் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கான ஊதிய மாற்றம் குறித்து மத்திய அரசு ஆகஸ்ட் 2017ல் உத்தரவு வெளியிட்டுள்ளது. நட்டத்தில் இயங்கும் பொத்துதுறை நிறுவனங்களுக்கு ஊதிய உயர்வுடன் (FITMENT) கூடிய ஊதிய மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதி BSNL நிறுவனத்துக்கும் பொருந்தும்.

ஓய்வூதிய மாற்றம்

BSNL நிறுவனத்தில் இணைந்தவர்கள் ஓய்வூதிய விதி 37Aன் கீழ் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். 2007ல் பணியில் உள்ள ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம்   அமலான போது ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதிய மாற்றம் அமல்படுத்தப்பட்டது. அதைப்போலவே மூன்றாவது ஊதிய மாற்றம் அமலாகும்போது ஓய்வூதிய மாற்றமும் அமலாகும்.

தனி டவர் நிறுவனம்

தனி டவர் நிறுவனம் அமைப்பது குறித்த முடிவை மத்திய அரசு செப்டம்பர் 2017ல் எடுத்தது. இந்த நிறுவனம் BSNL நிறுவனத்துக்கே முழுமையும் சொந்தமான நிறுவனமாக இருக்கும். 04.01.2018ல் BSNL டவர் கம்பெனி துவங்கி செயல்படத் துவங்கி விட்டது


பனி ஓய்வு வயதுக் குறைப்பு மற்றும் விருப்ப ஓய்வுத் திட்டம்

ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58 ஆகக் குறைப்பது, விருப்ப ஓய்வுத் திட்டம் போண் றவை BSNLல் இல்லை.

No comments:

Post a Comment