NFTECHQ

Thursday 31 May 2018


வாழிய பல்லாண்டு
31.05.2018  அன்று பணி நிறைவு பெறும்

1.தோழர் S.ராஜமாணிக்கம் DGM (F)
2.தோழர் S.E. மணியன் SDE
3.திரு.P.S.ராமசாமி JTO சத்தி
4.தோழர் P. தங்கவேல் OS  தாராபுரம்
5.தோழர் R.முருகசாமி TT கோபி
6.தோழர் G.சம்பத்குமார் TT கோபி
7.தோழர் M.பொன்னுசாமி TT ஈரோடு
8.தோழியர் M. பழனியம்மாள் TT ஈரோடு
9.தோழியர் N. புஷ்பா ATT ஈரோடு
10.தோழர் V. ரவி TT ஈரோடு
11.தோழர் M மணி TT கொடுமுடி
12.தோழர் K.K.அர்ஜுணன் TT  ஹாசனூர்
13.தோழர் P. மாரிமுத்து TT அவல்பூந்துறை
14.தோழர் K. நாகராஜன் TT பவானி
15.தோழர் K.சுப்ரமணியன்  TT கொடுமுடி
16.தோழர் N. ஈஸ்வரன் TT பவானி
17.தோழர் R. குப்புசாமி  TT ஈரோடு
18.தோழர் V. ராமசாமி TT பெருந்துறை
19.தோழர் குணசேகரன் ATT தாராபுரம்
ஆகியோர்
நலமுடனும்
 மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Wednesday 30 May 2018


வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு கோரி நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் இரண்டு நாட்கள் (மே 30,31) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் மொத்த ஊதியத்தில் 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் முதல் புதிய ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வாராக் கடனைக் காரணம் காட்டி, 2 சதவிகித ஊதிய உயர்வு மட்டுமே வழங்க, வங்கி நிர்வாகங்கள் முடிவு செய்தன. இதனை வங்கி ஊழியர் சங்கங்கள் ஏற்கவில்லை. இதுதொடர்பாக கடந்த 5ஆம் தேதி மும்பையில் இந்திய வங்கிகள் சங்கத்துக்கும், ஊழியர் சங்கத்துக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இந்நிலையில், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கக் கூடாது, வாராக் கடன் வசூலிப்பதை விரைவுபடுத்த வேண்டும், பணிச்சுமைகளைக் குறைக்க புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மே 11ஆம் தேதி அறிவித்திருந்தது.
இதையடுத்து, டெல்லியில் மத்திய தொழிலாளர் நலத் துறை தலைமை ஆணையர் முன்னிலையில் நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. எனவே, திட்டமிட்டபடி மே 30, 31 ஆகிய 2 நாள்கள் போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
 இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் 21 பொதுத் துறை வங்கிகளில் இருந்து சுமார் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.


காணாமல் போகும் வங்கிகள்

மிக மோசமான வருவாய் இழப்பையும், வாராக் கடன் பிரச்சினைகளையும் சந்தித்துவரும் இந்திய வங்கிகள் சில இத்துறையில் நீண்ட நாள்கள் நீடிப்பது கடினமானது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநரான எஸ்.எஸ்.முந்த்ரா கருத்துத் தெரிவித்துள்ளார்.
வாராக் கடன் உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கும் 11 பொதுத் துறை வங்கிகளை ரிசர்வ் வங்கி சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உட்படுத்தியுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் அதில் பாதி அளவு வங்கிகள் செயலற்றுப் போகும் வாய்ப்புள்ளது. ரிசர்வ் வங்கியின் சீரமைப்பில் உள்ள இவ்வங்கிகள் ஏற்கெனவே தங்களது கடன் நடவடிக்கைகளில் சரிவைச் சந்தித்து வருகின்றன. எனவே, இவ்வங்கிகள் தங்களது மூலதனத்தைக் கொண்டு தொடர்ந்து இயங்க முடியுமா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து இயங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையெனில் அவற்றை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவது சரியான முடிவாக இருக்காதுஎன்று கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் சீர்திருத்தக் கண்காணிப்பில் உள்ள 11 வங்கிகளில் 10 வங்கிகள் தங்களது காலாண்டு வருவாய் விவரங்களை வெளியிட்டுள்ளன. அதில் ஒன்பது வங்கிகள் வாராக் கடன் சுமையைக் குறைக்கும் நடவடிக்கையில் எவ்வித முன்னேற்றமும் காணவில்லை. பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மட்டுமே சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது. சமீபத்தில் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், ‘2015ஆம் ஆண்டின் மார்ச் 31ஆம் தேதி ரூ.2.67 லட்சம் கோடியாக இருந்த இந்தியப் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு 2017 ஜூன் 30ஆம் தேதி ரூ.6.89 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாகச் சென்ற இரண்டு ஆண்டுகளில் மட்டும் வங்கிகளின் வாராக் கடன் இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. இந்தியாவின் 21 பொதுத் துறை வங்கிகளில் 11 வங்கிகளின் வாராக் கடன் அல்லது செயற்படா சொத்துகளின் மதிப்பு அவற்றின் மொத்த சொத்துகளின் மதிப்பை விட 15 சதவிகிதம் அதிகமாக இருக்கிறதுஎன்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

Tuesday 29 May 2018


பதஞ்சலி சிம் கார்டு அறிமுகம்

பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து பதஞ்சலி நிறுவனம் தனது பிரத்யேக சிம் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் (FMCG) சந்தையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கே சவால் விடும் வகையில் பல்வேறு வகையான நுகர்பொருட்களை ஆயுர்வேத முறைப்படி தயாரித்து விற்பனை செய்துவரும் பதஞ்சலி நிறுவனம், இத்துறையில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாகத் திகழ்கிறது. இத்துறை மட்டுமல்லாமல் ஆடை தயாரிப்பு, பாதுகாப்புச் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் களம்கண்டுள்ள பதஞ்சலி தொலைத் தொடர்புத் துறையையும் விட்டுவைக்கவில்லை. மே 27ஆம் தேதி ஹரித்வாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பதஞ்சலி நிறுவனரும், அதன் விளம்பரத் தூதருமான யோகா குரு பாபா ராம்தேவ் பதஞ்சலி நிறுவனத்தின் பிரத்யேகசுதேசி சம்ரிதிசிம் கார்டை அறிமுகப்படுத்தினார்.
பிஎஸ்என்எல் நெட்வொர்க் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகம் செய்துள்ள இந்த சிம் கார்டு சேவை துவக்கத்தில் பதஞ்சலி நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும், பின்னர் நாடு முழுவதும் இதன் சேவை விரிவுபடுத்தப்படும் எனவும் பாபா ராம்தேவ் கூறினார். பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் சுமார் 5 லட்சம் சிம் கார்டு கவுன்ட்டர்கள் இருப்பதாகவும், அங்கு கூடிய விரைவில் பதஞ்சலி சிம் கார்டுகள் கிடைக்கும் எனவும் பாபா ராம்தேவ் கூறியுள்ளார். ரூ.144 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்புச் சலுகையுடன், 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களும் பதஞ்சலி சிம் கார்டுகளில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. பதஞ்சலி சிம் கார்டுகளில் பதஞ்சலி தயாரிப்புகளை 10 சதவிகிதத் தள்ளுபடியில் பெறலாம் எனவும் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.